நடிகை நயன்தாரா விற்கும் நடிகர் தனுஷ் இருக்கும் இடையே மோதல் சர்ச்சையில் திரையுலகம்:
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வரும் நயன்தாரா அவர் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
தனது திருமண வீடியோவை எந்த சோசியல் மீடியாலும் வெளியிடாமல் NETFLIXல் வெளியிட அனுமதி பெற்றனர் இந்த நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து தற்போது தன் திருமண வீடியோவை வெளியிடுவதற்கு முன்பாக டிரைலர் ஒன்று சம்பீபத்தில் வெளியிட்டனர்.
அதில் நயன்தாரா வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் திரைப்படத்தில் வந்த காட்சிகளிலும் சிலவற்றை வெளியிட்டனர். தற்பொழுது அந்த வீடியோ வெளியிட்டதில் தனுஷ் அவர்கள் ஒரு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.
2015 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படத்தில் ஷூட்டிங் தளத்தில் சில காட்சிகள் எடுக்கப்பட்டன அந்த காட்சிகள் நயன்தாராவின் Nayanthara: Beyond The Fairy Tale என NETFLIXல் வெளியிடப்பட்டது.
நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் மூன்று செகண்ட் உள்ள அந்த காட்சிகள் அந்த netflix ட்ரைலரில் இடம்பெற்று இருந்தது. இது குறித்து தனுஷ் அவர்கள் தன்னிடம் பர்மிஷன் வாங்காமல் வீடியோ போட்டதாக கூறி அந்த மூன்று செகண்ட் வீடியோவிற்கு 10 கோடி ரூபாய் அபதாரம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் நயன்தாராவிற்கு அனுப்பியுள்ளார்.
இது குறித்து நயன்தாரா அவர் ஒரு பதிவை பதிவிட்டு உள்ளார். அதில்
தனுஷிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே இதன் குறித்து NOC தடையில்லாத சான்றிதழை பெறுவதற்கு காத்திருந்தனர் ஆனால் இதற்குப் பலன் அளிக்காததால் தனுஷ் அவர்கள் எந்தவிதமான பதிலும் கூறாமல் இருந்ததால் அதை கைவிட்டனர். இதன் காரணமாக தான் என்னுடைய திருமண வீடியோ இத்தனை ஆண்டு காலமாக வெளியிடாமல் இருந்தது. இப்பொழுது திருமண வீடியோவை ஆவண படமாக மாற்றி வெளியிட உள்ள நிலையில் சில நிமிட ட்ரைலர் ஒன்றை வெளியிட்டார்கள். அந்த ட்ரைலர் வெளிய வந்ததும் தனுஷ் இதுக்கு பர்மிஷன் கேட்கவில்லை என்று கூறி இப்பொழுது அவர்கள் மீது புகார் அளித்துள்ளார்.
Nayanthara: Beyond The Fairy Tale ட்ரைலர் பயன்படுத்தப்பட்ட மூணு நொடி வீடியோவிற்கு எதிராய் லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட ஏற்கனவே இணையத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்பது இருப்பது மிகவும் வினோதமாக இருக்கிறது.
கீழ்தரமான இந்த செயல் ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவதை போல் ஒரு சதவீதம் கூட உங்களால் நடத்திக் கொள்ள முடியாது என்பதை நானும் என் கணவரும் நன்றாக அறிந்திருக்கின்றோம். என்மீதும் என் கணவர் மீதும் உள்ள தனிப்பட்ட வெறுப்பினால் இதை தனுஷ் செய்கிறார் என்று நயன்தாரா தனுஷ் மீது குற்றம்சாட்டி உள்ளார்.