மே 29ஆம் தேதி நடந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியமில் நடந்து முடிந்தது.
கிரிக்கெட் போட்டியை காண்பதற்கக தோனியின் மனைவி சாக்ஷி தனது அன்பு மகள் ஜிவாவுடன் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நேரில் வந்து பார்த்து ரசித்தார்.

தனது கணவர் விளையாடும்போது அவருக்கு உற்சாக குரல் எழுப்பி ஊக்கமும் கொடுத்தார் . அந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெட்ரா உடன் தோனி தனது மனைவி சாக்ஷி மற்றும் மகள் ஜிவாவை அழைத்து கட்டி பிடித்து தனது அன்பை பரிமாறி தனது வெற்றியை கொண்டாடினார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது ரசிகர்களுக்கு பெரிய சந்தோஷத்தை கொடுத்தது. இந்த கிரிக்கெட் போட்டியை பார்ப்பதற்காக ஏராளமான பிரபலங்கள் அகமதாபாத்துக்கு படையெடுத்தனர்.
கிரிக்கெட்டை நேரில் பார்த்து ரசிப்பதற்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு நேரில் வந்து இருந்தார் அப்போது தல தோனி அவர்களின் மனைவி சாக்ஷியுடன் செல்பி ஒன்றை எடுத்து அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் அங்கு உள்ள பெண் ரசிகர்களிடம் செல்பி எடுத்து அதனையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் யோவ் மிலிட்டரி நீ எங்கே இங்க வந்த அண்ணியை காணோம் நயன் எங்கே என்று ஜாலியாக கலாய்த்து வருகிறார்கள்.
