தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. தமிழ் தெலுங்கு மலையாளம் என மும்மொழிகளிலும் ரசிகர் கூட்டம் அதிகம். அதுமட்டுமின்றி இவர் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் நயன்தாரா சமீபகாலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கிய மூக்குத்தி அம்மன் படம் வெளிவர உள்ளது. தற்போது ரஜினியின் அடுத்த படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவிற்கு குரானா தொற்று இருப்பதாக வதந்திகள் வெளிவந்தன, அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து ஒரு வீடியோவை வெளியிட்டனர். அதுபோல தற்போது நயன்தாராவின் படப்பிடிப்பின் போது நிகழ்ந்த வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அதில் தன் சக கலைஞர்களுடன் சிரித்து பேசி இருக்கும் நயன்தாராவை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.