தமிழ் சினிமாவின் உச்ச நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு இருக்கும் புகழ் இவருக்கும் உண்டு. இவரை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என்று தான் இவர் ரசிகர்கள் அழைப்பார்கள்.

இவர் சினிமாவில் நடித்த ஆரம்பத்தில் சிம்புவுடன் காதல் ஏற்பட்டு அது சில காலமே நீடித்த நிலையில், இயக்குனர் பிரபுதேவாவுடன் இணைந்து படம் நடித்ததில் காதல் ஏற்பட்டு அவர் பெயரை தன் கையில் பச்சை குத்தும் அளவிற்கு மிகவும் அவருடன் நெருக்கமானார். ஆனால் இந்த காதலும் தோல்வியில் முடிந்த நிலையில் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானார்.

சினிமாவை விட்டு விலகிய அவர் மீண்டும் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீஎண்ட்ரி கொடுத்தார் . இதன் பிறகு இவர்க்கு நிறைய பட வாய்ப்புகளும், கோடி கணக்கில் சம்பளமும் சூப்பர் ஸ்டாருக்கு இணையான புகழும் தமிழ் மக்கள் தந்தனர்.
இந்நிலையில் இவர் விஜய் சேதுபதியோடு நடித்த நானும் ரௌடி தான் படத்தின் மூலம் இயக்குனர் விக்னேஷ்சிவனுடன் காதல் ஏற்பட்டு தற்போது அவருடன் ஊர் சுற்றி வருகிறார். விக்னேஷ் சிவன் தற்போது நானும் ரௌடிதான் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ.