ஆர் ஆர் ஆர் படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் அமைத்தது குறித்து அதன் நடன இயக்குனர் பிரேம் ரிக்க்ஷித் கூறியது: நாட்டு நாட்டு பாடலுக்கான உருவாக்கத்தின் போது நான் தனிமையில் தவித்தபடி இருந்தேன். இது போன்ற ஒரு நடனம் நடக்காது என உணர்ந்த நான் வாஷ்ரூமில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக அழுது கொண்டு இருந்தேன்.
ஆனால் இயக்குனர் ராஜமவுளின் கடினமான உழைப்பால் தான் இது சாத்தியமானது. நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இரண்டு ஹீரோக்களான ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோரால் இது நிஜமானது. ஏனென்றால் அவர்கள் இருவரும் சிறந்த நடன கலைஞர்கள்.
மேலும் இசையமைப்பாளர் கீரவாணையின் இசை முழு சுமையையும் குறைத்து விட்டது. ராஜமவுலி என்னிடம் பாடலுக்காக கான்செப்ட் அது எப்படி அரங்கேற போகிறது என அனைத்தையும் சொல்லிவிட்டார். நாட்டு நாட்டு பாடலின் ஸ்டெப்புக்காக எனக்கு இரண்டு மாதங்கள் தேவைப்பட்டன.
பின்னர் பாடலை ஒத்திகை பார்க்கவும் பாடமாக்கவும் சுமார் 20 நாட்கள் ஆனது. ஜூனியர் என்டிஆர் சரி ராம்சரனும் சரி மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டனர். நான் என்ன சொன்னாலும் அதை அப்படியே உள்வாங்கிக் கொண்டு வெளிப்படுத்தினர்.
காலை 6:00 மணி எழுந்து இரவு 10 மணிக்கு தான் தூங்க செல்வோம். அனைவரும் பாடலுக்காக கடினமாக உழைத்தோம். இருவரின் ஸ்டைலுக்கும் ஒத்துப் போகும் வகையில் கிட்டத்தட்ட 118 வெவ்வேறு ஸ்டெப்புகளை முயற்சித்து பார்த்தோம்.
வழக்கமாக மூணு, நாலு ஸ்டெப்புகளை தான் நடனத்தில் அமைப்போம். அதற்கு 118 ஸ்டெர்களை ரிகர்சல் பார்த்தது கஷ்டமாக இருந்தது. இப்போது ஆஸ்கார் வாங்கிய பிறகு பட்ட கஷ்டம் எல்லாம் பறந்து போய்விட்டது.