நடிகை தேவயானியின் தம்பி நகுல் இவர் தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக நடிகை சுனைனா இந்த படத்தில்தான் அறிமுகமானார். காதலை மையமாக வைத்து எடுத்த இந்த படம் மிகப் பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. இந்த ஜோடியும் நல்ல பிரபலத்தை மக்கள் மத்தியில் அடைந்தனர்.
அதன்பிறகு இந்த ஜோடி இருவரும் சேர்ந்து மாசிலாமணி என்ற படத்திலும் நடித்து இருந்தனர். அதன்பிறகு சுனைனா தமிழ் சினிமாவில் பரிட்சயமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ட்ரிப் என்ற படத்தில் சோலோ நாயகியாக நடித்து வருகிறார் சுனைனா.கிடைத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக பயன்படுத்தும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
இந்நிலையில் நகுலும் கிடைத்த பட வாய்ப்புகளை பயன்படுத்திக் நடித்துவருகிறார். மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக எரியும் கண்ணாடி என்ற படத்தில் ஜோடி சேருகின்றனர். இந்த படத்தில் சஞ்சீவ் இயக்குகிறார் யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார் .
ஊரடங்கு முடிந்த பிறகு இந்த படப்பிடிப்பு வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் இந்த ஜோடியை திரையில் காண காதல் ரசிகர்களும் ஆர்வத்தில் உள்ளனர்.