கொரானோ தொற்று காரணமாக நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அன்றாட பிழைப்போரின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சினிமா துறையும், சின்ன திரையில் உள்ள கடைக்கோடி ஊழியர்களும் மிகவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் சிலர் மரணித்து வருகின்றனர். நடிகர் விசு, சேதுராமன், பறவை முனியம்மா போன்றோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் மலையாள சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருந்த எம்.கே. அர்ஜுன் கொச்சியில் உடல் நல்ல குறைவால் காலமானார். அவருக்கு வயது 83 . இவர் இதுவரை 200 கும் மேல் படங்களில் இசையமைத்துள்ளார்.
இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இவரிடம் தான் முதல் முதலில் கீ போர்டு வாசிக்கும் பணியில் சேர்ந்தாராம். இந்நிலையில் இவரது மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.