மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் ஹீரோவாக அறிமுகம் ஆகும் படத்தில் ஷூட்டிங் தொடங்கியது. முரளியின் மூத்த மகன் அதர்வா தமிழில் பல படங்களில் நடிக்கிறார்.
இவரது தம்பி ஆகாஷ் முரளி மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவை திருமணம் செய்துள்ளார். ஆகாஷ் முரளியும் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கடந்த ஓரிரு ஆண்டுகளாக தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில் சேவிய பிரிட்டோ தயாரிக்கும் படத்திலேயே ஆகாஷ் முரளி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்குகிறார்.
கடைசியாக பாலிவுட்டில் சித்தார்த் மல்கோத்ரா, கியாரா அத்வானி நடிப்பில் ஷெர்ஷா படத்தை விஷ்ணுவர்தன் இயக்கினார். அதற்கு முன் அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா, ஆரம்பம் படங்களை விஷ்ணுவர்தன் இயக்கியிருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இந்த படத்தை முடித்துவிட்டு மீண்டும் ஹிந்தியில் ஒரு படத்தை விஷ்ணுவர்தன் இயக்க உள்ளார். அதேசமயம் அஜித் படத்தை இயக்கவும் அவர் முயற்சி செய்து வருகிறார்.