Monday, August 17, 2026
-- Advertisement--

Mr X படம் முதல் நாளில் செய்துள்ள மாஸ் வசூல்!!!

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன் நாயகனாக அறிமுகமாகியவர். ஆர்யாவை ஒரு நடிகர் என்பதை தாண்டி சாதாரணமான மனிதராக எல்லோருக்கும் பிடிக்கும்.

காரணம் எப்போதும் கலகலப்பாக, தன்னை சுற்றியுள்ளவர்களை கலகலப்பாக வைப்பார். அதுமட்டுமில்லாமல் பிட்னஸ், சைக்கிளிங் என மக்களுக்கு நல்ல விஷயங்களை செய்துகாட்டி வருகிறார்.

தற்போது ஆர்யாவின் நடிப்பில் Mr X என்ற திரைப்படம் தயாராகி நேற்று (ஏப்ரல் 17) வெளியாகியுள்ளது. மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, மஞ்சுவாரியர், சரத்குமார், அனகா, அதுல்யா ரவி, ரைசா வில்சன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் மேவரிக் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு ஜி.கே. பிரசன்னா படத்தொகுப்பு பணியை செய்துள்ளார்.

நல்ல விமர்சனத்தை பெற்றுள்ள இப்படம் முதல் நாளில் ரூ. 1 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles