Sunday, September 6, 2026
-- Advertisement--

இந்தியாவில் அறிமுகமான Motorola Razr Fold.. விலை மற்றும் அம்சங்கள் என்ன?

மோட்டோரோலா ரேசர் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் இந்திய போன் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இது இந்தியாவில் வெளிவந்துள்ள மோட்டோரோலாவின் முதல் ஃபோல்டபிள் போனாகும்.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.

மோட்டோரோலா ரேசர் ஃபோல்ட் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் சாம்சங் Z ஃபோல்ட், கூகுள் பிக்சல் 10 புரோ ஃபோல்ட் மற்றும் விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 போன்களுக்கு இந்திய சந்தையில் போட்டியாக வெளிவந்துள்ளது.

இது பிரீமியம் செக்மென்ட்டில் வெளிவந்துள்ளது. உலக அளவில் கடந்த சில ஆண்டுகளாக போனின் திரையை இரண்டாக மடிக்கும் வகையிலான ஃபோல்டபிள் போன்கள் அறிமுகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

  • ஸ்னாப்டிராகன் 8 ஜெனரேஷன் 5 சிப்செட்
  • வெளிப்புற டிஸ்பிளே 6.6 இன்ச் (வெளிப்புறம்)
  • மெயின் டிஸ்பிளே 8.1 இன்ச் (உட்புறம்)
  • 12 / 16 ஜிபி ரேம்
  • 256 / 512 ஜிபி ஸ்டோரேஜ்
  • செல்ஃபி கேமராவை பொறுத்தவரையில் 32 மெகாபிக்சல் கொண்டுள்ளது மெயின் டிஸ்பிளே, 20 மெகாபிக்சலை கொண்டுள்ளது வெளிப்புற டிஸ்பிளே
  • 50 + 50 + 50 மெகாபிக்சல் என மூன்று கேமரா பின்பக்கம் இடம்பெற்றுள்ளது
  • ஆண்ட்ராய்டு 16 இயங்குதளம்
  • 6,000mAh பேட்டரி
  • 80 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • 50 வாட்ஸ் வயர்லஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 5ஜி நெட்வொர்க்
  • இந்த போனின் விலை ரூ.1.49 லட்சம் முதல் தொடங்குகிறது
  • மூன்று விதமான கலர் ஆப்ஷன்களில் இந்த போன் வெளிவந்துள்ளது

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles