Sunday, September 6, 2026
-- Advertisement--

3 செய்தி சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தம்..உதயநிதி கண்டனம், அமைச்சர் பதிலடி!

அரசு கேபிளில் இருந்து மூன்று செய்தி சேனல்கள் நீக்கப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தன்னை எவ்வளவு வேண்டுமானாலும் விமர்சியுங்கள்’ என்று முதல்வர் ரீல்ஸுக்காகப் பேசிவிட்டு, குறைகளைச் சுட்டிக்காட்டும் ஊடகங்களின் குரல்வளையை நெரிப்பது பாசிசத்தின் மற்றொரு வடிவம் என்று சாடியுள்ளார்.

ஊடகங்களை முடக்கினால் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை கைவிட்டு, நீக்கப்பட்ட சேனல்களின் ஒளிபரப்பு தொடர அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.

இந்தசூழலில் எழுந்த விமர்சனத்திற்கு பதிலளித்திருக்கும் அமைச்சர் ராஜ்மோகன், “3 சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன என்ற செய்தி தவறானது. சம்பந்தப்பட்ட மூன்று சேனல்களை தொழில்நுட்ப பிரச்னைகள் காரணத்தால் தற்காலிகமாக சில செட் ஆஃப் பாக்ஸ்களில் மட்டும் ஒளிபரப்பு செய்ய இயலவில்லை இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொலைக்காட்சி சேனல்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சரி செய்வதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனம் மூலமாக முழுவீச்சில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என விளக்கம் கொடுத்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles