Tuesday, September 8, 2026
-- Advertisement--

சோலார் திட்டத்தில் முறைகேடா? அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு!

நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை கடந்த ஜூன் 16-ம் தேதி நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் வெளியிட்டார். அதில், தமிழ்நாடு 13 லட்சம் கோடிக்கும் அதிகமான கடன்களை கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இந்தசூழலில் தான், மின்சாரத்துறையிலும் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் சமீபத்தில் தெரிவித்தார்.

அதன்படி இன்று சென்னை மின் வாரியத் தலைமை அலுவலகத்தில் மின்சார வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல்குமார் இன்று வெளியிட்டுள்ளார்.மின்சாரத்துறை வெள்ளை அறிக்கையில், மின் துறையில் மொத்தம் 65,921 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. மொத்த பணியிடங்கள் 1,40,635. அதில் 74,714 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தாலும், மக்களுக்கு சிக்கல் இல்லாமல் சேவை செய்கிறோம்.

2021 முதல் 2026 திமுக ஆட்சியில் ரூ.4,97,996 கோடி வருவாய், ரூ. 5,32,443 கோடி செலவு,  ரூ. 34,447 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது‌‌. மின்சார வாரியத்திற்கு தற்போது ரூ.2,47,130 கோடி கடன் உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் புதிய அனல் மின் நிலையம் மற்றும் நீர்மின் நிலையம் கடந்த அரசு உருவாக்கவில்லை. சோலார் திட்டம் பெறுபவர்கள் Party fund  கொடுத்துள்ளனர். இந்த திட்டம் பெற முயற்சித்தவர்களிடம் கேட்டால் Party Fund குறித்து தெரியும்.

ஒரு வேலை Party fund கொடுத்து திட்டம் கிடைக்கவில்லை என்று இருந்தால் அவர்கள் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும். 25 ஆண்டுகளை கடந்த டிரான்ஸ்பார்மரை தொடர்ந்து பயன்படுத்த முடியாது. மொத்தம் 4,47,603 டிரான்ஸ்ஃபர் உள்ளது. அதில், 42,808 டிரான்ஸ்ஃபர் 25 ஆண்டுகளை கடந்து விட்டது.  மின்வாரியத்தில் பணிமாறுதல் வேண்டி யாரும் பணம் கொடுக்க வேண்டாம். நிர்வாக காரணம் என்ற பெயரில் இடமாற்றம் இனி நடைபெறாது. வருடத்திற்கு இரண்டு முறை பணிமாறுதல் கவுன்சலிங் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles