மிதுன ராசிக்காரர்களே இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு எவ்வித பலன்களை தரும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்
மிதுனம்
மிதுனத்திற்கு குரு கொஞ்சம் பாதகம் அதனால் நல்லது நிறைய செய்வார்கள். தெய்வ மார்க்க பயணங்கள், தெய்வ திருப்பணிகள், மகான்கள் தரிசனம், ஆன்மீக பெரியோர்கள் தரிசனம் எல்லாம் மிதுனத்திற்கு ஏற்படும். அதே சமயம் தொழில் மாற்றம் வரும், உத்தியோகத்தில் மாற்றம் வரும், வியாபாரத்தில் மாற்றம் வரும், படிப்பில் மாற்றம் வரும் இந்த மாற்றங்களை எல்லாம் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று செல்லவே கூடாது எந்த மாற்றம் வந்தாலும் அது அப்படியே ஏற்றுக்கொண்டு போனால் தான் மிதுன அனுகூலம் ஏற்படும்.
அதுபோல குரு பெயர்ச்சி வந்த உடனே ஒரு 40 நாளுக்குள் முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் அதில் முக்கியமாக இதய பரிசோதனை செய்து கொள்வதில் மிதுனம் மிகவும் முக்கியம் ஏனென்றால் இதயத்தில் சில பிரச்சனைகள் வரும் பிரஷர் வரும்.
சுப காரியங்கள் எல்லாம் இந்த சமயத்தில் மிதுனம் செய்யவில்லை என்றால் ரொம்ப வருடம் தள்ளி போகும் வாய்ப்பு உள்ளது. பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரம், சுப காரியம் எல்லாம் திடீரென்று நடக்கும். கணவன் மனைவிக்கு உண்டான நீண்ட நாள் பிரச்சனை தீரும் சண்டை போட்டு பிரிந்து இருக்கிறீர்கள் என்றால் ஒரு மெசேஜ் அல்லது நேரில் சென்று பார்த்தால் போதும் தீர்ந்துவிடும்.
இதில் உறவினர்களை நம்புவது, நண்பர்களை நம்புவது இதெல்லாம் கூடாது பெற்றோர் பெரியவருடன் மனதாங்கல்கள் இருக்கும் அது நீங்கள் பேசினாலே சரியாகிவிடும் அனுகூலம் ஏற்படும் செல்வாக்கு கைகூடும். எதிர்பார்க்காத இடத்திலிருந்து நல்ல செய்தி வரும் பெரிய நம்பிக்கையையும் பெரிய அனுகூலத்தையும் பெறக்கூடிய ராசிக்காரர்கள் மிதுனம்.
பரிகாரம்
கண்டிப்பாக நீங்கள் வைத்தீஸ்வரர் கோயிலுக்கு சென்று எண்ணையோ நெய்யோ ஒரு 50 கிராம் விபூதி, குங்குமம் கொடுத்து வாங்கிக் கொண்டு வந்து அதை வைத்து வந்தாலே போதும் தீமைகள் விலகி நன்மைகள் பெருகும்.