மேஷ ராசிக்காரர்களே இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு எவ்வித பலன்களை தரும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மேஷம்
தொழில் ரீதியாக கண்டிப்பாக அனுகுலம் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். துணை அல்லது துணைவியார் இடத்தில் இருந்த பாதிப்புகளுக்கு பரிபூரணமாக அனுகூலம் ஏற்படும். நீங்கள் ஆச்சிரியப்படும் அளவிற்கு முன்னேற்றம் கிடைக்கும். பெற்றோர் பெரியோரிடம் இருந்த மனக்கசப்புகள் படி படியாக குறையும். உடற்பயிற்சி தவறாமல் செய்யும் மேஷராசி காரர்கள் பெரிய வெற்றியையும் அனுகூலத்தையும் பெறுவார்கள். நீண்ட காலங்களாக தொடரும் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வார்த்தைகளில் இருந்த பாதிப்புகளில் இருந்து நிமிர்த்தி ஏற்படும்.
கணவன் மனைவி சண்டை, விவாகரத்து வரை சென்றவர்கள், நீண்ட நாட்கள் பிரிந்து இருப்பவர்கள் இந்நேரத்தில் சமாதான மனநிலைக்கு கண்டிப்பாக வருவார்கள். குடும்பத்தில் குடும்பத்தாருடன் தெய்வீக யாத்திரைகள், உறவினர் வீட்டிற்கு செல்வது, நண்பர்களுடன் செல்வது, இன்ப சுற்றுலாவிற்கு செல்வது, நிலத்தில் முதலீடு செய்வது, வீடு, நகை வாங்குவது போன்ற எல்லா அனுகூலமும் மேஷ ராசிகாரர்களுக்கு உண்டு.
உங்களுக்கு இருந்த பெரிய சிக்கல்களெல்லாம் மாறக்கூடிய அமைப்பு ஏற்படும் மிக சோகையாக இருப்பவர்கள் மேஷ ராசிக்காரர்கள் ஆனால் மிகவும் சுறுசுறுப்பாக நடந்துகொள்வார்கள். இரவில் தாமதமாக உறங்கும் மேஷ ராசிக்காரர்கள் நேரத்திற்கு உறங்கி நல்ல ஆரோக்கியத்தையம் சந்தோஷத்தையும் பெறுவார்கள் ஆகமொத்தத்தில் இந்த குருபெயர்ச்சியில் தைரியத்தில் மட்டும் சிறு சிறு குழப்பங்கள் இருக்கும் அந்த குழப்பங்களை மட்டும் நிமிர்த்தி செய்துக்கொண்டாள் நல்லதே நடக்கும்.
பரிகாரம்
மேஷம் ராசி காரர்கள் திருவேற்காடு சென்று கோவிலுக்கு தங்கலால் இயன்ற நல்லெண்ணெய் பசுநெய் ஐம்பது கிராம் விபூதி குங்குமம் கொடுத்து வழிபாடு செய்து வர தீமைகள் விலகி நன்மைகள் பெருகும்.