சாத்தான்குளத்தில் மேலும் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் மக்கள் மனதை கலங்க வைத்துள்ளது.
நெல்லை பேருந்து நிலையத்தில் இருந்து சாத்தான்குளத்தில் 11 மணியளவில் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. நெல்லையிலிருந்து சாத்தான்குளத்திற்கு செல்லும் பேருந்தை ஓட்டியவர் மீசை முருகேச பாண்டியன் என்ற ஓட்டுனர்.
சாத்தான்குளத்தில் நெருங்குவதற்கு சில கிலோமீட்டர்களில் ஓட்டுனர் மீசை முருகேச பாண்டியன் அவர்களுக்கு திடீரென்று நெஞ்சு வலி வந்துள்ளது. பேருந்தை ஓரம்கட்டி வலியை பொறுத்துக்கொண்டு நடத்துனரை அழைத்து தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியிருக்கிறார். பேருந்தில் 55 பயணிகள் இருக்கிறார்கள் அனைவரும் சாத்தான்குளம் தான் செல்கிறார்கள் நான் சாத்தான்குளத்தில் வண்டியை நிறுத்துகிறேன் என்று நடத்துனரிடம் கூறிவிட்டு வலியைத் தாங்கிக்கொண்டு மனிதர் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பேருந்தை ஓட்டி சாத்தான்குளத்திற்கு சென்றிருக்கிறார்.
சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் வண்டியை நிறுத்திவிட்டு நடத்துனர் உதவியுடன் ஆட்டோ ஒன்றில் ஏறி தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அதன் பின் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு சென்ற மீசை முருகேச பாண்டியன் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்து ஓட்டுனரின் இந்த இறப்பு செய்தி தெரிந்தவுடன் அவருடன் பணிபுரியும் சக ஓட்டுனர்கள் மற்றும் பேருந்தில் பயணம் செய்த சில பயணிகள் அஞ்சலி செலுத்தினர்.
தனது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு 55 பயணிகளை பத்திரமாக அழைத்து வந்து பேருந்து நிலையத்திற்கு விட்டுச்சென்ற ஓட்டுநர் மீசை முருகேச பாண்டியன் உலகத்தை விட்டு சென்று விட்டார் என்ற செய்தி கண்களை கலங்க வைக்கிறது.