தமிழ் திரையுலகில் 21 வருடங்களுக்கு மேலாக முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. இதுவரை இவர் பலரின் கனவு கன்னியாக வலம் வருகிறார்.


தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை தமிழில் விஜய், அஜித் கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். இந்நிலையில் தமிழில் ஒரு படத்தில் கதாநாயகியாக படிக்காதவர் மீரா மிதுன்.

தற்பொழுது திரிஷாவின் மீது பழி சுமத்தி உள்ளார். அதாவது திரிஷா மீராமிதுன் ஸ்டைலையும் அவரது ஹேர் ஸ்டைல் போன்றவற்றை காப்பி அடிப்பதாகவும், இது போன்று இன்னொரு முறை செய்ய வேண்டாம் எனவும் த்ரிஷா மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுபோன்று செய்தால் நடவடிக்கை எடுப்பேன் எனவும் அவர் கூறியுள்ளார் . இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மீராமீதுனிற்கு எதிராக பல ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.











