Friday, June 14, 2024
-- Advertisement--

உதயநிதியுடன் மீரா மிதுன்..!! திமுகவில் இணைவது உறுதியோ..?

பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டவர் மீராமிதுன். இந்த சீசனில் பெரும்பான்மையான மக்களின் வெறுப்பை பெற்றவர் இவர் . அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு நெட்டிசன்கள் இடம் வாங்கி கட்டி வருகிறார். இந்நிலையில்

சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் நிர்வாகத்தை கண்டித்து ஒரு டுவிட் செய்திருந்தார். நான் முதலமைச்சராக மாறினேன் என்றால் எல்லா பிரச்சினையும் மிக விரைவில் தீர்த்துவிடலாம் என்று கூறினார். அதன் பிறகு திரிஷா என்னை பார்த்து காப்பி அடிக்கிறா, ர் இனிமேல் அப்படி செய்தால் நான் அவர் மீது போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறினார். இது எல்லாம் போதாது என்று சமீபத்தில் ரஜினி ஒரு கன்னடர் விஜய் ஒரு கிறிஸ்டியன் என இவர்களையும் விட்டுவைக்காமல் ட்விட் செய்து இருந்தார்.

அதன்பிறகு தற்பொழுது தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார், அதில் புதிய சகாப்தத்தை நாம் உருவாக்கும் என்றும், உதயநிதியின் டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்து நாம் இணைந்து வெற்றி பெறுவோம் என்றும், திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்கள் டுவிட்டர் பக்கத்தை ஹேக் செய்தும் பதிவு செய்துள்ளார்.

இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விரைவில் அவர் திமுகவில் சேர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது . இதனை நீங்கள் ஏற்கனவே ஆளும் கட்சி மற்றும் விஜய் ரஜினியை குறித்து தவறாக ட்விட் செய்யும் போது எங்களுக்கு தெரியும் நீங்கள் திமுகவில் தான் இணைய போகிறீர்கள் என்றும் இந்த நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles