பிரபல மாடல் அழகி மிரா மிதுன். இவர் இதுவரை தமிழகத்திற்கு ஒரு முறை கூட எந்த உதவியும் செய்தது கிடையாது. தன்னார்வலரும் கிடையாது. தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர் கிடையாது. ஒரு மேடையில் கூட இவர் ஏறி சரளமாக தமிழ் பேசுவது இல்லை.

இந்நிலையில் தான் வேலையை ஒழுங்காக செய்வதை விட்டுவிட்டு தற்போது கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து வரும் நிலையில் உலக அரசாங்கத் தலைவர்கள் பலரும் இந்த தொற்றை கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரியாமல் விழி பிதுங்கி வருகின்றனர்.

அரசுகளும் அதற்கு ஏற்ற முயற்சிகளை பொருளாதார இழப்புகள் ஏற்பட்டாலும் மக்களின் நலன் கருதி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஒருமுறை கூட சமூக பற்றோடு நடந்து கொண்டதாக தெரியாத மீராமிதுன், தற்பொழுது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் தற்போது உள்ள அரசாங்கத்தை உடனடியாக நீக்குங்கள் பிரதமரே, என்னை முதல்வர் ஆக்குங்கள், நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். ஒரு வாரத்தில் இந்த கொரானோவை நான் அழித்து விடுவேன். நான் ஒரே மாதத்தில் அனைத்து குற்றவாளிகளையும் ஜெயிலில் தள்ளி விடுவேன். மூன்று மாதத்தில் ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவேன், ஆறுமாதத்தில் இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவேன், என பல சவால்களை இட்டுக்கட்டி அவர் இஷ்டத்திற்கு பட வசனம் போல் பேசியுள்ளார்.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் யார் எது வேண்டுமானாலும் பேசலாம் என்று அரசு பொறுத்து இருக்காமல் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது குறித்து பலரும் பல எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.










