சர்ச்சை நாயகி மீரா என்று தன இவருக்கு தற்போது பட்டப்பெயர். தொடர்ந்து தன் கருத்துக்களாலும், வெளியிடும் புகைப்படங்களாலும் சர்ச்சையை உருவாக்கி கொள்பவர் இவர் தான்.
மீராமீதுன் இவருக்கு முதல் தமிழ் படம் தல அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படம் தான். அந்த படத்தில் த்ரிஷாவின் தோழியாக நடித்து இருந்தார் ஆனால் அதனை கத்திரி போட்டுவிட்டார்கள். அதன் பின் “8 தோட்டாக்கள்” படத்தில் நடித்தார். அதன் பின் நயன்தாரா காதலரான விக்னேஷ் சிவன் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தில் கலையரசனின் கோபக்கார மனைவியாக நடித்தார்.
தற்போது படவாய்ப்புகளை தேடி வரும் இவர், திரையுலகில் பிரபலன்களாக இருக்கும் அனிருத், வெங்கட் பிரபு, சிம்பு, விஷால் போன்றோரோடு எடுத்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டு வைரலாகி வருகிறார்.