Saturday, October 10, 2026
-- Advertisement--

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் சேர்க்கை.. மத்திய அரசிடம் M. K. Stalin அவசர நடவடிக்கை கோரிக்கை!

2026-27 கல்வியாண்டுக்கான நீட் தேர்வினை ரத்து செய்து, 12-ம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை மாநில அரசுகளே நிரப்பிக் கொள்ள அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

ஸ்டாலின் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், “நீட் தேர்வில் உள்ள அமைப்புரீதியான குறைபாடுகள் மீண்டும் ஒருமுறை வெளிச்சத்துக்கு வந்துள்ளன. வினாத்தாள் கசிவினைத் தொடர்ந்து, 2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மிகுந்த கவலையோடு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

முறைகேடுகளில் ஈடுபட்டதாக, பல மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் இதுவரை பிடிபட்டுள்ளனர். சிபிஐ விசாரணை நடக்கிறது. 22.8 லட்சம் மாணவர்கள் அடுத்து என்ன ஆகும் எனத் தெரியாமல் தவிக்கின்றனர்.

நீட் மொத்தமாக ஒழிக்கப்பட வேண்டும் எனும் எனது கோரிக்கையை மீண்டும் தேர்வு இரத்து செய்யப்பட்டுள்ளதால் சில உடனடிச் சிறப்பு நடவடிக்கைகளையும் எடுக்கக் கோருகிறேன்.

இந்த ஆண்டு நீட் பிரதமர் எனது இந்தக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு, இலட்சக்கணக்கான இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற -பிற்படுத்தப்பட்ட – ஏழை மாணவர்களின் எதிர்காலத்தை உறுதிசெய்திட வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles