Monday, June 24, 2024
-- Advertisement--

தளபதி விஜய்யின் மாஸ்டர் கதையின் பின்னணியில் உள்ள ருசிகர தகவலை வெளியிட்டது..! மாஸ்டர் பட குழு..!!

தளபதி விஜய் பிகில் படத்தை அடுத்து நடித்துள்ள படம் மாஸ்டர். படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்து வருகின்றது. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, விஜே ரம்யா, மாளவிகா மோகனன், போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ள பாடல்கள் வெளிவந்து இணையத்தில் மிகவும் வைரலாகி வருகின்றது. மாஸ்டர் பட ரிலீஸ் எப்போது என்று ரசிகர்கள் காத்திருந்த நிலையில், ஊரடங்கு காரணமாக பட ரிலீஸ் அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் இணை எழுத்தாளர்களில் ஒருவரான பொன் பார்த்திபன் சமீபத்தில் அளித்த பேட்டியில் மாஸ்டர் படம் குறித்த ஒரு தகவலை தெரிவித்துள்ளார். அதாவது படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நிஜ வாழ்க்கையில் நான் சந்தித்த கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட தான் இந்த மாஸ்டர் படம் என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விஜய் இந்த படத்தில் முதல்முறையாக கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கான ரிலீஸ் எதிர்பார்த்து தமிழக விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles