விஜய் நடித்த மாஸ்டர் படம் மிகுந்த வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றுள்ளது. படப்பிடிப்பின் போது வீஜய் வீட்டில் வருமான வரி துறையினர் சோதனை செய்தது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் இப்படத்தில் அனிருத் இசையில் விஜய் குரலில் பாடிய ஒரு குட்டி ஸ்டோரி பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து மாஸ்டர் படத்தின் மூன்று விதமான போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகின.
இந்நிலையில் அனிருத் இசையில் வாத்தி கம்மிங் பாடல் வெளிவந்து அதுவும் வைரலானது. இந்நிலையில் இப்படத்தில் இசை வெளியிட்டு விழாவும் மிகவும் மாஸாக நடந்தது. இந்நிலையில் கடந்த மாதம் வெளிவர இருந்த மாஸ்டர் படம் ஊரடங்கு காரணமாக எப்போது வெளியாகும் என கேள்வி குறியாக உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் உரிமையை சன் டிவி குழுமம் 30 கோடிக்கு வாங்கியுள்ளது.