Saturday, October 10, 2026
-- Advertisement--

விசாகப்பட்டினத்தில் மாபெரும் திரிசூலம் திறப்பு.. ஆன்மிக மையமாக மாறும் பகுதி!

விசாகப்​பட்​டினத்​தில் உள்ள கைலாசகிரி மலைப்​பகுதி பிரபல சுற்றுலா தலமாகும். இங்​குள்ள சிவன், பார்​வதி சிலைகள் மிக​வும் பிரசித்தி பெற்​றவை​யாகும்.

வார இறுதி நாட்​கள், பண்​டிகை நாட்கள் மற்​றும் கோடை விடு​முறை​யில் இங்கு அதிக சுற்​றுலாப் பயணி​களை காணலாம். இப்​பகு​தியை மேலும் அழகாக்க, விசாகப்​பட்​டினம் நகர வளர்ச்சி கழகம் (விஎம்​ஆர்​டிஏ) இங்கு 65 அடி உயரத்​தில் உடுக்​கை​யுடன் கூடிய திரிசூலம் சிலை அமைக்க முடிவு செய்​தது. 

சமீபத்​தில் அமைச்சர் நாராயணா பூஜைகள் நடத்தி திரிசூலத்தை பொது​மக்களின் பார்​வைக்கு கொண்டு வந்​தார். மலை உச்​சி​யில் உள்ள இந்த திரிசூலத்தை நகரில் எந்த இடத்​தில் இருந்​தும் காண முடியும். இரவில் எல்​இடி விளக்கு வெளிச்​சத்​தில் திரிசூலம் ஜொலிக்​கிறது.

65 அடி உயரம் கொண்ட திரிசூலத்​தில் உடுக்கை மட்​டும் 18 அடி அகல​மும், 10 அடி உயர​மும் கொண்​டுள்​ளது. ரோப்​-வே உள்ள இந்த மலைக்கு தற்​போது சுற்​றுலா பயணி​கள் அதி​கம் வர தொடங்கி விட்​டனர். சுமார் 8 மாத​மாக திரிசூலம் கட்​டு​மானப் பணி​கள் நடந்​தன. சமீபத்​தில் இதன் திறப்பு விழா நடந்து முடிந்துள்​ளது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles