நயன்தாரா திருமணம் சென்னையில் மகாபலிபுரத்தில் உள்ள Sheraton Grand என்ற ரிசார்ட்டில் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. விஐபிகளுக்கு மட்டும் அனுமதி அதிலும் திருமண நிகழ்ச்சியை புகைப்படம் எடுக்கக்கூடாது திருமணத்திற்கு வருபவர்கள் கியூ ஆர் கோட் ஐ காட்டி அதன்பின் தான் உள்ளே வரவேண்டும் என்று பல ஸ்ட்ரிக்ட் கண்டிஷன்களை போட்டார்கள் நயன்தாரா தரப்பு.

காரணம் நயன்தாராவின் திருமண நிகழ்ச்சியை NETFLIX என்ற OTT தளம் பல கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது நயன்தாராவின் திருமணத்தை அவருடைய நெருங்கிய நண்பர்களே புகைப்படம் எடுக்க முடியவில்லை. அந்த அளவிற்கு பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தார்கள் நயன்தாரா விக்கி தரப்பு.

விஐபிகள் கலந்துகொண்டு நயன் விக்கியின் திருமணம் 10.25 மணிக்கு இன்று காலை பிரமாண்டமாக நடந்து முடிந்தது. நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணத்தை காண்பதற்காகவே ரெசார்ட்டை சுற்றி அவருடைய ரசிகர்கள் நின்று கொண்டிருந்தார்கள் ஆனால் இந்த திருமணத்திற்கு யாருக்கும் அனுமதி கிடையாது என்பதால் அவர்கள் பாதுகாவலர்களால் திரும்ப அனுப்பப்பட்டார்கள்.

RESORTக்கு வெளியில் நரிக்குறவர்கள் ஒன்றுகூடி நாங்கள் நயன்தாரா அக்காவை பார்க்க வேண்டும் அவங்களுக்கு திருமணம் என்று சொன்னாங்க அவங்கள பாக்கணும்னு ஆசையா நிற்கிறோம் என்று கூறி வந்தார்கள்.
அந்த அளவிற்கு நயன்தாராவிற்கு ரசிகர்கள் இருக்கும் நிலையில் நயன்தாராவின் திருமண புகைப்படம் வெளிவராதா என்று அவருடைய ரசிகர்கள் காத்திருந்தனர் இந்த நேரத்தில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தற்பொழுது இணையத்தில் தங்களுடைய திருமண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அதை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளிக் குவிக்கிறார்கள்.

கழுத்தில் தாலியுடன் இருக்கும் நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் அன்பு முத்தம் கொடுப்பது போல இருந்தது அந்த புகைப்படம்.