நடிகை மஞ்சிமா மோகன் தற்போது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து இணையத்தை கலக்கி வருகின்றன.
இயக்குநர் கெளதம் வாசுதேவ மேனனின் இயக்கத்தில், சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன்.
படங்கள் மெகா ஹிட் ஆகாதபோதிலும், மஞ்சிமாவின் நடிப்பு ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தது. ‘தேவராட்டம்’ படத்தில் கெளதம் கார்த்திக்குடன் நடித்த போது காதல் மலர, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். தற்போது திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் ஆக்ட்டிவாக உள்ளார்.
சமீபமாக மஞ்சிமா, போட்டோஷூட்களில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது எடிசன் விருதை கையில் வைத்துள்ள புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். இந்த விழாவிற்கு சென்றுள்ள மஞ்சிமா அணிந்துள்ள சுடிதாரின் விலை மட்டும் 35,900 ரூபாயாகும். அதற்கு மேட்ச் செய்யும் விதமாக அவரை அணிந்துள்ள துப்பட்டாவின் விலை 9,900 ரூபாயாகும். இது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது










