மணிரத்தினம் இயக்கத்தில் கமலஹாசன் சிம்பு நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் ThugLife இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ThugLife படத்தின் டிரைலர் சில நிமிடங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது.
படத்தின் டிரைலர் படி கமலஹாசன் ஒரு GANGSTER ஒரு பிரச்சனையில் இருந்து அவரை ஒரு சிறுவன் காப்பாற்றுகிறான் அவனை எடுத்து கமலஹாசன் வளர்த்து பெரிய DON ஆக்குகிறார். ஒரு சூழ்நிலையில் சில விஷயங்களால் யார் இங்கே பெரியவர் என்று கமலும் சிம்புவும் நேரடியாக மோதிக் கொள்ளும் கதையே ThugLife என்று ட்ரெய்லர் மூலம் கூறியுள்ளார்கள்.

கமல் ஆக்சன் காட்சிகளில் அதகளம். நடிகை அபிராமி உடன் லிப்லாக் த்ரிஷாவுடன் ROMANCE என்று 70 வயது கமலஹாசன் 25 வயது இளைஞர் ரொமான்ஸில் துள்ளல். சிம்பு நீண்ட நாட்களுக்கு பிறகு அவருடைய நடிப்பிற்கு சரியான தீனி போட்ட கதாபாத்திரம் என்று தோன்றுகிறது. திரிஷா அழகு தேவதை. அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி ரோல் சஸ்பென்ஸ். கூடுதல் பலமாக AR ரஹமான் இசை.
செக்க சிவந்த வானத்தை ட்ரைலர் கொஞ்சம் நினைவுபடுத்தினாலும் கமல் சிம்பு இந்த ரெண்டு நடிப்பு அரக்கர்களின் நடிப்புற்க்காக இந்த படத்தை எதிர்பார்க்கலாம் .
ட்ரைலர் இதோ: