சூரி பத்தோடு பதினொன்றாக திரையில் நின்று வெண்ணிலா கபடி குழு படத்தில் இடம் பெற்ற பரோட்டா காமெடி மூலம் பிரபலமாகி பரோட்டா சூரியாக மக்கள் மனதில் இடம் பிடித்து அதன் பின் நகைச்சுவையில் தனக்கென்று ஒரு முத்திரை பதித்து தற்பொழுது மக்களால் ஹீரோவாக ஏத்துகொள்ளப்பட்ட நல்ல மனிதர்.
சூரி நடித்த மாமன் திரைப்படம் வர இருக்கும் இந்நேரத்தில் திருப்பூர்க்கு ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக சென்று இருந்தார் சூரி அங்கு அவர் பேசியது எமோஷனலாக மாறியது. திருப்பூர் தான் முதல் முதலில் நான் பிழைப்புக்காக வந்த ஊர். காசு யிலான சாப்பிடாம கூட இருப்பேன். இங்க என்னுடைய சம்பளம் ஒரு நாளைக்கு 20 ரூபாய். இந்த மண் தான் எனக்கு போதி மரம். சென்னை சென்று பல வேலைகளை பார்த்து இப்போது கதையின் நாயகனாக வந்து இன்னைக்கு இந்த இடத்துல ஒரு pre-ரிலீஸ் நடக்குது பாருங்க.
நான் பட்ட கஷ்டம் இருக்கே எனக்கு இதை விட எனக்கு மரியாதை எங்கயும் கிடைக்காதுங்க. திருப்பூர்ல நடக்காத இடம் இல்லை இன்னைக்கு சிவப்பு கம்பளம் விரிச்சி வரவேற்று மேடைல விசில் அடிச்சி கைதட்டி ஏத்திவிட்ட மாதிரி இருந்திச்சி. நீ நில்லுடா உனக்கான மேடைடானு சொன்ன மாதிரி இருந்திச்சினு கூறிய அவர் அவ்வளவு கஷ்டப்பட்டேன் ஒரு நேரத்துலனு கண்ணீருடன் பேசி உள்ளார் சூரி .
சூரி கண்ணீருடன் பேசிய போது மேடையில் அமர்ந்திருந்தவர்கள் முகமே மாறியது. எங்கு வாழ்க்கையின் தொடக்கத்தில் கஷ்டப்பட்டாரோ அதே இடத்தில் ஸ்டார் ஆக வந்து நின்ன சூரியை நினைத்தால் பெருமை தான்.