தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் நடிகை என்றால் அது நயன்தாராதான். 10 வருடங்களுக்கு மேல் கனவு கன்னியாக இவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு தற்போது சம்பளம் 3 கோடி வரை ஒரு படத்திற்காக பேசப்படுகிறது.
இவரது மார்க்கெட் கொஞ்சம் கூட குறையாத நிலையில், இவருக்கு அதிக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன . இந்நிலையில் இவர் கதாநாயகிகளுக்கு முக்கியம் உள்ள கதாபாத்திரங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவருக்கு இணையாக தற்போது மற்றுமொரு நாயகி வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் தமிழ் சினிமாவை பொறுத்தவரை இரண்டு படங்களிலேயே நடித்துள்ளார். இன்னும் அவர் கதாநாயகியாக நடித்த படம் வெளிவரவில்லை. பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த பிறகு தற்போது இளைய தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இன்னும் இவர் படம் வெளிவராத நிலையில் இவரது மார்க்கெட் மற்றும் உயர்ந்துகொண்டே போகிறது.
இவருக்கு தற்போது சம்பளம் ஐந்து கோடி என்று பேசப்படுகிறது. மாளவிகா மோகனன் தற்போது பாலிவுட்டில் ஆக்சன் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்துக்காக அவர் 5 கோடி சம்பளம் கேட்டு உள்ளார். தொடர்ச்சியாக 100 நாட்களில் இந்த படத்திற்காக அவர் கால்சீட் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு முடிந்தபின் இந்த படப்பிடிப்பு வேலைகள் தொடரும் எனவும் கூறப்படுகிறது.