தமிழ் சினிமாவில் பல நடிகைகள் எப்படியாவது முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்று ஓயாது நடித்து வருகின்றனர். பல படங்களில் நடித்தும் இன்னும் முதலிடத்தில் வராமல் பல நடிகைகள் உள்ளனர்.
இந்நிலையில் ஒரே ஒரு படத்தில் நடித்து தற்போது நயன்தாரா விற்கு இணையான இடத்தை பிடித்திருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். ரஜினி நடித்த காலா படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார் மாளவிகா. இந்த படம் முழுவதும் புடவை மட்டும் தான் அணிந்து வருவார்.

தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லாவிட்டாலும் தமிழ்பெண் முகத்தை இவர் கொண்டிருப்பதால் தமிழ் ரசிகர்களுக்கு இவரை பிடித்து விட்டது. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகிவிட்டது. இதன் காரணமாக இவர் தற்போது விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கில் நயன்தாராவுக்கு இணையான சம்பளம் வாங்கும் ஒரே நடிகை மாளவிகா மோகனன் தான். தமிழ் மொழி மட்டுமல்லாது மாளவிகா தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் . சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் பார்ப்பவரைக் கவரும் வண்ணம் இருந்தது மஞ்சள் நிற உடையில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் புது புகைப்படங்களை வெளியிட்டார் மாளவிகா. இதைப்பார்த்த நெட்டிசன் ஒருவன் மஞ்ச காட்டு மைனா என வர்ணித்துள்ளார்.

