தமிழக சட்டம்- ஒழுங்கு டிஜிபி-யாக மகேஷ் குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஆக.31-ம் தேதியுடன் ஓய்வுபெற்றார்.
அவர் ஓய்வு பெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே, அடுத்து தகுதிவாய்ந்த டிஜிபி-க்களின் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) மாநில அரசு அனுப்பிவைத்திருக்க வேண்டும்.
ஆனால், அப்படி நடைபெறாமல் ஜூனியரான வெங்கட ராமனை பொறுப்பு டிஜிபி-யாக தமிழக அரசு நியமித்தது. இதற்கிடையே தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடந்தபோது, சந்தீப் ராய் ரத்தோரை சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக தேர்தல் ஆணையம் நியமித்தது.
தற்போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டநிலையில், தமிழகத்தில் புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக மத்திய பணியாளர் தேர்வாணைய ஆலோசனைக் கூட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெற்றது.
டிஜிபி-க்களான ராஜீவ்குமார் (காவல் உயர் பயிற்சியகம்), சந்தீப் ராய் ரத்தோர், மகேஷ் குமார் அகர்வால் (அயல் பணியாக எல்லை பாதுகாப்பு படை-டெல்லி) ஆகிய 3 பேர் பட்டியலுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் ஒப்புதல் வழங்கி தமிழக அரசுக்கு அவர்களின் பெயர்களை பரிந்துரைத்தது.
இந்நிலையில், தமிழகத்தின் புதிய டிஜிபி-யாக மகேஷ் குமார் அகர்வால் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளார்.










