மகர ராசிக்காரர்களே இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு எவ்வித பலன்களை தரும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மகரம்
திருவெண்காடு மிக முக்கியம். திருவெண்காடு புத்தஸ்தலம் முதுகுத் தண்டுவடம், யூரினரியா இருக்கட்டும், மலக்குடலாய் இருக்கட்டும் கவனம். மகரத்திற்கு குரு ஆறாம் இடத்திற்கு வருகிறார் ஐந்தாம் இடத்தில் இருந்து குரு ஆறாம் இடத்திற்கு மாறுவது மூன்றுக்கும் 12க்கும் உரிய ஸ்தானம் அதிபதி உங்களுக்கு. அவர் ஆறில் மறைவது நல்லது பன்னிரண்டாம் இடத்தை பார்ப்பது பத்தாமிடத்தை பார்ப்பது இரண்டாம் இடத்தை பார்ப்பது பார்வை பலம் தான். அதனால் பயணங்கள் சமயத்தில் வாக்குவாதம் கூடாது. சண்டை சர்ச்சை யாரிடத்தில் இருந்தாலும் அதில் மிக கவனமாகபார்த்துக் கொள்வது மிக மிக முக்கியம்.
தொழில் ரீதியாக கண்டிப்பாக மாற்றம் ஏற்படும். தொழில் உத்தியோகம் வியாபாரம் படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் திடீர் முன்னேற்றம் ஏற்படக்கூடிய ராசிக்காரர்கள் யார் என்று பார்த்தால் மகர ராசிக்காரர்களே. புதிய முயற்சிகள் அனுக்கூலத்தை தரும். பதவி உயர்வு ஏற்படக்கூடிய ராசி இழுப்பறியாக இருந்த நிலைமை படிப்படியாக மாறும். எதிர்பார்க்காத இடத்திலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். புது தொழில் தொடங்கலாம், புது படிப்பு படிக்கணும் இந்த படிப்பு இல்லை வேற படிப்பு படிக்கணும், இசை, சினிமா, டிராமா, நடிப்பு ஏதேனும் ஒன்றில் ஈடுபட்டு கலைத்துறையில் அல்லது மீடியாவில் போகும் ஆசை இருந்தால் விரைவில் ஈடுபட வேண்டும்.
கண்டிப்பாக பயணங்கள் சமயத்தில் புது அறிமுகத்திலும் சண்டை சச்சரவு, நண்பர்களுக்காக செல்வது, உறவினர்களுக்காக செல்வது கூடாது. கூடா நட்பு கூட பழக்கங்கள் மகர ராசிக்காரர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் இதில் சென்று மாட்டிக் கொண்டால் மீளவே முடியாது. மகரத்திற்கு ஏழரை சனி விலகி விட்டது மூன்றாம் இடத்தில் சனி இரண்டரை வருஷம் உதவப் போகிறார். குரு பத்தாமிடமான தொழில் ஜீவன ஸ்தானத்தை பார்க்கப் போகிறார் எனவே எல்லாவற்றிலும் வெற்றி பெற யோசித்து முதலில் இறங்கினால் மிகப்பெரிய வெற்றி.
பரிகாரம்
திருவெண்காடு மிக முக்கியம் திருவெண்காடு புத்தஸ்தலம் சென்று வழிபட்டால் தீமைகள் யாவும் விலகும்.