Thursday, September 10, 2026
-- Advertisement--

இது காதலை மையமாக கொண்ட படம்” – புதிய பட அனுபவத்தை பகிர்ந்த மடோனா!

சனந்த், மடோனா செபாஸ்டியன், இமையா நடித்து கிஷோர் குமார் இயக்கியுள்ள படம் `ஹார்டின்’. காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் ஜூன் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பேசிய மடோனா செபஸ்டியன், “இந்தக் கதை மிகவும் பிடித்துதான் படத்தைத் தேர்வு செய்தேன். அதை மிக அழகாக முடித்தோம். எவ்வளவோ காதல் கதைகள் பார்த்திருப்போம். ஆனாலும் மீண்டும் ஒரு காதல் கதை என்றால் அதில் வித்தியாசமான ஒன்றைத்தான் எதிர்பார்ப்போம். அப்படியான வித்தியாசம் இதில் இருக்கிறது. நிறைய உணர்வுகள் இந்தப் படத்தை உருவாக்கையில் இருந்தது.

அது உங்களுக்கும் புரியும் என நம்பிக்கை இருக்கிறது. ’பிரேமம்’ உட்பட பல காதல் படங்களின் தாக்கம் என்ன என்பது நாம் அறிந்ததே. இதுவும் அப்படியான ஒரு படமாக உருவாகி இருக்கிறது. நீங்கள் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் ஒரு படமாக இது இருக்கும்” என்றார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles