தமிழில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய அலைபாயுதே என்ற காதல் படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதவன். இவர் படத்திற்கு வரும் முன்பே திருமணம் ஆகிவிட்டது.
இந்த படத்தில் கிடைத்த பெரிய வரவேற்பை வைத்து இவர் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார். இவர் தமிழக மக்களால் மேடி என்று செல்லமாகவும் அழைக்கப்படுவார்.
2009 நடிகர் மாதவன் மன்மதன் அன்பு என்ற தமிழ் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு ஆறு வருடமாக எந்த தமிழ் படத்திலும் அவர் கமிட்டாகவில்லை, ஆறு வருடத்திற்கு பிறகு வித்தியாசமான கதை களத்தில் இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் , தெலுங்கு, ஹிந்தி என மூன்று படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
மாறா படத்திற்கு பிறகு தமிழில் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்த மாதவன் தற்பொழுது திருச்சிற்றம்பலம் படத்தை இயக்கிய ஜவகர் ஆர் மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் மாதவன் எப்பொழுதும் அவர் புதிதாக நடிக்கவுள்ள படத்தின் கெட்டப்பை தன் இணைய பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அதுபோல தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.
இந்தப் புகைப்படத்தில் அலைபாயுதே வில் பார்த்த மாதவன் போலவே மிகவும் ஸிலிம்மாக மாறி சிறு வயது மாதவனாக தோற்றமளிக்கிறார். இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு மாதவன் புதிய ப்ராஜெக்ட்டுக்கான தோற்றம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என பதிவிட்டுள்ளார். இதற்கு கலவையான கமெண்ட்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.