பிக்பாஸ் என்ற ஒரே சீசன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் இலங்கை நாட்டு செய்து வாசிப்பாளரான லாஸ்லியா.இவர் இந்த சீசனில் கலந்துகொண்ட பிறகு இவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகம் ஆகிக்கொண்டே போனது.
இன்னும் சொல்ல போனால் இந்த சீசனில் இவருக்கு தான் முதலில் ஆர்மி தொடங்கப்பட்டது. இந்நிலையில் இவர் இந்த சீசனில் இருந்து வெளியேறிய பிறகு இவர் தற்போது பட வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. இவர் பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரன்ஷிப் படத்தில் நடித்துவந்தார்.
தற்போது ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் இவர் சிம்பிளாக மொட்டை மாடியில் எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.