Sunday, April 20, 2025
-- Advertisement--

இறந்து ஒரு மாதத்திற்கு பிறகு கனடாவில் இருந்து இலங்கை வந்தது லொஸ்லியாவின் தந்தையின் உடல்..!!! கதறி அழும் அவரது குடும்பத்தினர்.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர் தான் லாஸ்லியா. லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் சேரனை பார்க்கும் போதெல்லாம் தனது தந்தையை பார்த்தது போல இருக்கிறது என்று தந்தை ஸ்தானத்தில் இயக்குனர் சேரனை பார்த்து வந்தார்.

எனது அப்பாவை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று வருத்தப்பட்டார் லாஸ்லியாவின் தந்தை கனடாவில் பணிபுரிந்து வந்தார். பிக்பாஸ் வீட்டில் கவின் லாஸ்லியா காதல் அவரது தந்தை காதுக்கு வர வெளிநாட்டிலிருந்து பிக்பாஸ் வீட்டுக்கே வந்தார் அவரது தந்தை.

தந்தையைக் கண்டதும் லாஸ்லியா கட்டிப்பிடித்து அழத் தொடங்கினார். அப்பாவின் பாசம் பல வருடங்கள் கிடைக்காமல் தவித்த லாஸ்லியா தனது தந்தை பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

தந்தை கூறிய அறிவுரையை ஏற்ற லாஸ்லியா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வந்தார். தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் அவர்களுக்கு ஜோடியாக பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகிறார் லாஸ்லியா.

இந்நேரத்தில் நவம்பர் 15 ஆம் தேதி அன்று கனடாவில் உடல் நலக்குறைவால் லொஸ்லியாவின் தந்தை மரியநேசன் உயிரிழந்தார். ஆனால் அவரது உடலை ஸ்ரீலங்காவிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. கொரோனா காலகட்டம் என்பதால் கனடாவிலிருந்து முறையாக விதிப்படி உடலை ஸ்ரீலங்காவிற்கு எடுத்து வருவதற்கு தாமதம் ஆனது .

இறந்த செய்தியை மட்டும் தெரிந்துகொண்ட லாஸ்லியா மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டிலிருந்தே அஞ்சலி செலுத்தினர். தனது தந்தையின் உடலை கூட பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று லாஸ்லியா அழுதார். இந்நிலையில் ஒரு மாதம் கழித்து இன்று லாஸ்லியாவின் தந்தை உடல் ஸ்ரீலங்கா வந்து இறங்கியுள்ளது.

கோட் சூட்டில் அவரின் உடலை சவப்பெட்டியில் பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

இவரைப் போல தனது குடும்பத்திற்காக வெளிநாட்டில் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் பல தந்தைகள் இன்றும் இருக்கிறார்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles