Wednesday, December 4, 2024
-- Advertisement--

விஜயின் அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவில்லையா புலம்பும் ரசிகர்கள்..!!! லோகேஷ் போட்ட ட்வீட் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்.

லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் அனைவரையும் தன் மீது திசை திருப்பிய இயக்குனர் எந்த ஒரு அனுபவமும் இல்லாமல் சினிமாவை காதலித்தால் கண்டிப்பாக ஜெயிக்கலாம் என்பதற்கு லோகேஷ் ஒரு முன்னுதாரணம். சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பது, விறுவிறுப்பான காட்சிகளையும் லோகேஷ் தனது கதையில் வைப்பதால் மக்கள் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கு பெரிய வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

மாநகரம் திரைப்படத்தை முடித்து விட்டு லோகேஷ் கார்த்தியின் கைதி திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் அப்போது தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் அழைத்து கதை கேட்டு உள்ளார். JD கதாபாத்திரத்தை விஜயிடம் லோகேஷ் சொல்ல உடனே இந்த கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது கதையை ரெடி பண்ணிட்டு வாங்க என்று அனுப்பி வைத்தார் விஜய்.

மாஸ்டர் திரைப்படத்திற்கு முன்பு கார்த்தியை வைத்து இயக்கிய கைதி திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது சினி வட்டாரத்தில் லோகேஷ் புராணம் பாடி வந்தார்கள் ரசிகர்கள். மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் முன்பே கூறிவிட்டார் 50% இது விஜய் சார் படமாக இருக்கும் 50% என்னுடைய படமாக இருக்கும் என்று கூறியிருந்தார் அது போலவே மாஸ்டர் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை பெரிய அளவில் திருப்திபடுத்தியது. வசூலில் பெரிய மாபெரும் சாதனை படைத்தது.

மாஸ்டர் படத்திற்குப் பின் கமல்ஹாசன் அவர்களை சந்தித்து கதை சொன்ன லோகேஷ்சிடம் எனக்கு ரொம்ப நாள் விக்ரம் படத்தின் இரண்டாம் பாகம் செய்ய வேண்டுமென்பது ஆசை அது முயற்சி எடுத்தேன் சில காரணங்களால் தள்ளிக்கொண்டே போய்விட்டது என்று கூற லோகேஷ் கனகராஜ் விக்ரம் இரண்டாம் பாகத்தை நான் எடுக்கிறேன் என்று முன்வந்து ஸ்கிரிப்ட் எழுதி கமலை அசத்தியிருந்தார். படமும் வெளியாகி இதுவரை வெளியான கமலின் படங்களிலேயே அதிக வசூலை பெற்ற தமிழ் திரைப்படம் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்து யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவிவருகிறது. விஜயுடன் மறுபடியும் லோகேஷ் கனகராஜ் இணைவது மீடியா தரப்பில் உறுதி செய்யப்பட்டாலும் லோகேஷ் கனகராஜ் இந்த விஷயத்தை பொறுத்தவரை தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பது தான் முறை கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்று கோரிக்கை வைத்தார்.

தற்பொழுது லோகேஷ் கனகராஜ் சிறிது காலத்திற்கு சோசியல் மீடியாவை விட்டு விலகுவதாக TWEET ஒன்றை போட்டுள்ளார் அத்துடன் விரைவில் என்னுடைய அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு உடன் வருகிறேன் என்று லோகேஷ் கூறியுள்ளார்.

திடீர் என்று லோகேஷ் இந்த முடிவை ஏன் எடுத்தார் ஒரு வேலை விஜய் படம் உறுதி அகவில்லையோ என்று ரசிகர்கள் கேட்க ஆரம்பித்தார்கள். இது குறித்து சினி வட்டாரத்தில் விசாரித்ததில் லோகேஷ் கனகராஜ் விக்ரம் வெற்றிக்கு பிறகு தனது அடுத்த கதைக்கான பணிகளில் தீவிரமாக இறங்கிவிட்டாராம். விஜய் தற்பொழுது வாரிசு திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அதற்குள் கதையை வலுப்படுத்த லோகேஷ் கொஞ்ச நாட்கள் சோசியல் மீடியாவை விட்டு ஒதுங்கி உள்ளார் என்று தகவல்.

தளபதியோட லோகேஷ் கூட்டணி உறுதி

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles