லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர். மாநகரம் என்ற வெற்றிப்படத்தை கொடுத்து திரும்பி பார்க்க வைத்தவர்.அதன் பின் கைதி கொடுத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜயுடன் மாஸ்டர் கமலுடன் விக்ரம் மீண்டும் விஜயுடன் LEO என வெற்றி இயக்குனராக தமிழில் வலம்வந்து கொண்டு இருப்பவர். தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற படத்தை எடுத்து வருகிறார்.
சமீபத்தில் லோகேஷ் கொடுத்த பேட்டியில் கூலிக்கு பிறகு கைதி 2 எடுக்க இருப்பதாகவும், அதன் பின் விக்ரம் 2 எடுக்க உள்ளதாகவும் கூறியவர். ரோல்ஸ் என்ற படத்தில் சூர்யாவுடன் இனைய பேசி உள்ளதாக கூறி உள்ளார்.

LEO 2 எடுப்பிங்களானு என்ற கேள்விக்கு லோகேஷ் எனக்கு லியோ 2 எடுப்பதோடு மாஸ்டர் 2 எடுக்கவேண்டும் என்பது என் ஆசை இதை விஜய் அண்ணாவிடமே சொல்லி உள்ளேன். அவருக்கு என் ஐடியா தெரியும் JD கதாபாத்திரத்தை இன்னும் நிறைய எடுக்கலாம் so master 2 செய்யனு ஆசை என்று கூறி உள்ளார்.

லியோ திரைப்படம் சில நிறை குறைகள் கூறினார்கள் அனைத்தையும் எடுத்து கொண்டு நான் வேலை செய்கிறேன் அதே நேரத்தில் அந்த 20 % பிளாஷ் பேக் மொத்த படத்தையும் பாதிக்கவில்லை என்றும் அந்த படத்தின் பிஸ்னஸ்க்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறிய அவர்.
விஜய் இனி நடிக்கமாட்டாரே எப்படி உங்கள் LCUவில் லியோவை கொண்டுவருவீங்கன்னு கேட்ட கேள்விக்கு விஜய் அண்ணா இப்போ எடுத்த முடிவு பெரிய விஷயம் அவர் இலக்கு இப்போ வேறு. ஒரு வேலை விஜய் அண்ணாவை வைத்து எடுக்கமுடியவில்லை என்றால் லியோ தாஸ் என்ற பெயர் போதும் என்று புகழ்ந்து தள்ளி உள்ளார் லோகேஷ்.