Tuesday, September 8, 2026
-- Advertisement--

அதிமுகவை விட்டு தவெகவில் இணைந்த லோகேஷுக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்துடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு, இன்று தனது முதல் அமைச்சரவை விரிவாக்கத்தை அதிரடியாக செய்துள்ளது.

மொத்தம் 23 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்று உள்ளனர். இதில் பல புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.இந்த புதிய அமைச்சரவை பட்டியலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஒரு முக்கிய பெயர், ராசிபுரம் தனித் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி. லோகேஷ் தமிழ்செல்வன் ஆகும்.

அவருக்கு தவெக அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
42 வயதாகும் டி. லோகேஷ் தமிழ்செல்வன், தமிழக அரசியலில் மிகவும் பரிச்சயமான ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். அதிமுகவின் மூத்த தலைவரும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமான பி. தனபாலின் மகன் தான் இந்த லோகேஷ் தமிழ்செல்வன்.

லோகேஷ் தமிழ்செல்வன் ஒரு படித்த இளம் அரசியல்வாதி ஆவார். அவர் சென்னை லயோலா கல்லூரியில் கடந்த 2005 ஆம் ஆண்டு பி.காம் (B.Com) படிப்பை முடித்தார். அதன் பிறகு, டெல்லியில் உள்ள ஐஐபிஎம் (IIPM) கல்வி நிறுவனத்தில் எம்பிஏ (MBA – Marketing Management and Personal Management) முதுகலை பட்டப் படிப்பை 2007 இல் முடித்துள்ளார்.

அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவர் ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகச் செயல்பட்டு வந்தார். தேர்தல் ஆணையத்தில் அவர் தாக்கல் செய்த அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, அவருக்கும் அவரது மனைவிக்கும் சொந்தமாகத் தொழில்கள் உள்ளன.

அவருக்கு எவ்விதமான குற்றப் பின்னணியோ அல்லது நிலுவையில் உள்ள போலீஸ் வழக்குகளோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.முதலமைச்சர் விஜய் தனது அமைச்சரவையில் படித்த, சுத்தமான பின்னணி கொண்ட இளைஞர்களுக்கும், அதே சமயம் அரசியல் அனுபவம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் முன்னுரிமை கொடுத்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles