தற்பொழுது உள்ள குழந்தைகள் பாலுடன் ஏதாவது புரோட்டின் விட்டமின் போன்ற பவுடர்களை சேர்ந்து பருகி வருகின்றனர். இந்நிலையில் மிகப் பிரபலமான புரோட்டின் பவுடர் காம்ப்லைன் குழந்தைகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
கோயம்புத்தூர் தெலுங்குபாளையம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்திக் என்பவர் இவர் தனியார் நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கார்த்திக் அந்த பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் காம்ப்லைன் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். தினமும் சுகன்யா தனது குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பாக்கெட்டைத் திறந்து பார்க்கும்போது அதில் பல்லி இறந்த நிலையில் இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சுகன்யா தனது சிறுவனுக்கு முன்னதாக இதை கொடுத்ததால் அவனை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
பெரும்பாலானோர் உபயோகிக்கும் காம்ப்லைன் பாக்கெட்டில் பல்லி இறந்து கிடந்தது குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் இந்த தம்பதியினர் புகார் அளித்துள்ளனர்.