தமிழ் சினிமாவில் நடன இயக்குனர், பட இயக்குன, ர் தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத் திறமைகள் கொண்டவர் ராகவாலாரன்ஸ். இவர் சினிமாவில் ஜொலிக்கும் நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பினும் சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
சமீபகாலமாக கொரானோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிக நிதி உதவி அளித்த ஒரே தமிழ் நடிகர் ராகவா லாரன்ஸ் மட்டும்தான். மேலும் தன்னிடம் இல்லாவிட்டால் மற்ற நட்சத்திரங்களும் உதவி கேட்டு அந்த உதவியை கொரானாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகிறது.
இப்படி பல நல்ல காரியங்களை செய்யும் இவரின் தொண்டு நிறுவனத்தில் உள்ள 15 மாணவர்களுக்கும், 3 பணியாளர்களுக்கும், 2 சமையல்காரர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி ராகவா லாரன்ஸ் மிகவும் மன வருத்தத்தில் ஆழ்த்தியது.
20 பேரும் லயோலா கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது இவர்கள் 20 பேரும் குணமடைந்து உள்ளதாக செய்திகள் வெளி வந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் ராகவா லாரன்ஸ் ரசிகர்களே ஒரு நல்ல செய்தியை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ளப் போகிறேன். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தற்போது இல்லை என்பது உறுதியாகி உள்ளது. அவர்கள் அனைவரும் மீண்டும் காப்பகம் திரும்பி உள்ளனர்.
நான் நம்பியது போல எனது சேவை என் குழந்தைகளை காப்பாற்றி விட்டது. அவர்களுக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் எனது நன்றி, சேவையே கடவுள், உதவி செய்த அமைச்சர் வேலுமணி மற்றும் ஜிவி பிரகாஷ் ஆகியோருக்கும் எனது நன்றி, என கூறியுள்ளார்.