Sunday, September 6, 2026
-- Advertisement--

விஜய்யின் அரசியல் எப்படி? ஒரே வார்த்தையில் பதிலளித்த லதா ரஜினிகாந்த்!

தமிழக அரசியல் களத்தில் முதலமைச்சராக விஜய் பதவியேற்ற பிறகு, அவரைச் சுற்றிய அரசியல் விவாதங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. குறிப்பாக, ஒரு காலத்தில் அரசியலுக்கு வருவார் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ரஜினிகாந்த் மற்றும் தற்போது அரசியலில் வெற்றி கண்டுள்ள விஜய் ஆகியோரின் பெயர்கள் அடிக்கடி ஒப்பிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சமீபத்தில் “மக்கள் மேடை” என்ற புதிய சமூக மற்றும் மக்கள் நல அமைப்பை தொடங்கியுள்ள லதா ரஜினிகாந்த், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது விஜயின் அரசியல் செயல்பாடுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அளித்த பதில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நிகழ்ச்சியில் பேசிய லதா ரஜினிகாந்திடம், “முதலமைச்சர் விஜயின் கடந்த 30 நாட்கள் அரசியல் செயல்பாடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் முதலில், “நான் இதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை” என்று சுருக்கமாக கூறினார்

ஆனால் மீண்டும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “இப்போதுதான் அவர் தனது அரசியல் பயணத்தை தொடங்கியிருக்கிறார். கொஞ்சம் காலம் செல்லட்டும். அதன் பிறகு அவரது செயல்பாடுகளை மதிப்பிடலாம். இப்போது எதையும் சொல்ல முடியாது” என்று பதிலளித்தார். இந்த பதிலை பார்த்த பலரும், “இது ரஜினிகாந்த் ஸ்டைல் பதில்” என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles