கும்ப ராசிக்காரர்களே இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு எவ்வித பலன்களை தரும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
கும்பம்
வயிற்றுப் பகுதியில் மட்டும் தான் பிரச்சனை ஏற்படும். வயிற்றில் சிறிய பிரச்சனை இருந்தாலும் கூட மருத்துவரின் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. பிள்ளைகளுடன் கோபம் கூடது. கும்ப ராசி காரர்களுக்கு எல்லாமே நன்றாக இருந்தாலும் பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகளுடைய பழக்க வழக்கத்தில் சிறிது கவனம் செலுத்த வேண்டும்.
தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையும். கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலை மனைவியாக இருந்தால் கணவனின் உடல்நிலை பார்த்துக்கொள்ள வேண்டும். ஜென்மத்தில் ராகு வருவதனால் மன அழுத்தம் வரும் மன அழுத்தத்திற்கு ஆர்ப்படக்கூடாது. நாம் நரசிம்ம கவசத்தை கேட்க கேட்க மன அழுத்தம் நிச்சயமாக வராது.
பொருள் சேர்க்கை ஏற்படும். முதலீடுகள் அதிகமாக செய்யக்கூடிய ராசிக்காரர்கள் கும்ப ராசிக்காரர்கள். பழைய நட்பில் ஏதாவது பாதிப்பு இருந்தால் பேசி தீர்த்துக் கொள்ளக்கூடிய ராசிக்காரர்கள் கும்ப ராசிக்காரர்கள். நீங்கள் நடுவில் நிற்பவர்களை நம்பாதீர்கள் யாரிடம் பேச வேண்டுமோ அவர்களிடமே நேரடியாக பேசுங்கள்.
தொழில் ரீதியான தடைகள் எல்லாம் தவிடுபடியாகும். மேலதிகாரிகள் உடைய ஆசீர்வாதம் தெய்வீக ஆன்மீக பெரியோர்களுடைய ஆசிர்வாதம் ஏற்படும். 60 வயது 65 வயது வரைக்கும் இருக்கக்கூடிய கும்ப ராசிக்காரர்களுக்கு தெய்வ கடாட்சம் ஏற்படுவது கண்கூடாக பார்க்கலாம். நிறைய விஷயத்தில் அனுகூலங்கள் ஏற்படும். குடும்பம் இருக்கக்கூடிய வீட்டில் சுப காரியங்களும் சுப விஷயமும் நடந்தே தீரும்.
பரிகாரம்
தெங்களூர் சந்திரன் கோவிலுக்கு சென்று 50 கிராம் நல்லெண்ணெய் அல்லது பசு நெய், 50 கிராம் விபூதி, 50 கிராம் குங்குமத்தை கொடுத்து கோவில் முறைப்படி பூஜை செய்து விபூதி குங்குமம் வாங்கி வருவது மிக நல்லது.