தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி படங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். கொழுகொழுவென இருந்த கீர்த்தி சுரேஷ் தற்போது ஸ்லிம்மாக மாறி பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
தமிழ் நன்றாக பேச தெரிந்த நடிகைகளில் கீர்த்தி சுரேஷின் ஒருவர் இவரது பூர்வீகம் கேரளா என்றாலும் இவர் வளர்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில் தான் என்பதால் இவர்கள் தமிழ் ரசிகர்கள் இவருக்கு அதிகம்.

தொடர்ந்து படங்களில் பிஸியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அவ்வப்போது இன்ஸ்டாகிராமிலும் பல புகைப்படங்களை வெளியிடுவார். சமீப காலமாகவே கீர்த்தி சுரேஷ் பற்றிய பல வதந்திகளும் கிசுகிசுகளும் வெளிவந்த வண்ணம் சமூக வலைத்தளத்தில் உள்ளன. எதற்கும் பதில் அளிக்காமல் தன் வேலையை தொடர்ந்து செய்து வரும் தீர்த்து சுரேஷ் காதலிக்கிறார் என்ற செய்தியும் வெளிவந்தது.

அந்த செய்தி தற்போது உறுதி செய்யும் வண்ணம், அவர் கேரளாவை சேர்ந்த ஒருவரை காதலித்து வருகிறார். இருவரும் பள்ளிக்கூடத்தில் இருந்து நண்பர்கள் எனவும் தற்போது அவர் பெரிய தொழிலதிபராக உள்ளார் என்றும், கேரளாவில் சொந்தமாக RESORT ஒன்றும் வைத்துள்ளார் என்ற செய்திகளும் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமின்றி கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யை அவர் வீட்டிற்கு வர வைத்து தனது காதலரை அறிமுகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதன் பிறகு கீர்த்தி சுரேஷ் விரைவில் தன் காதலர் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கீர்த்தி சுரேஷின் காதலரை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.