Friday, October 16, 2026
-- Advertisement--

திடீரென ஓய்வு அறிவித்த கயாடு லோஹர்.. காரணம் என்ன?

தமிழில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கிய `டிராகன்’ படம் மூலம் அறிமுகமாகி பெரிய வரவேற்பைப் பெற்றார். அடுத்தாக, மாரி செல்வராஜ் இயக்கும் `மஞ்சணத்தி’ படத்திலும் நடிக்க உள்ளார். சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் தன்னைப் பற்றி பரப்பப்படும் அவதூறுகள் தம்மை மிகவும் பாதிப்பதாகக் கூறி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது சமூக ஊடகங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போவதாக அறிவித்துள்ளார். அதில், “சமூக ஊடகங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கப் போகிறேன்.

சில நேரங்களில், நாம் நம் உடலுக்குக் கொடுக்கும் அதே வகையான ஓய்வு மனதிற்கும் தேவைப்படுகிறது. நான் நிதானித்து, சிறிது நேரம் துண்டித்துக்கொண்டு, திரைக்கு அப்பால் என்னுடனும் வாழ்க்கையுடனும் அதிக நேரம் செலவிட வேண்டும் என்ற தேவையை உணர்கிறேன்.

எனக்கு ஆதரவளித்த, என்னை ஊக்குவித்த மற்றும் இங்கே அன்பைப் பரப்பிய அனைவருக்கும் நன்றி. உங்கள் செய்திகளும் அன்பும் நீங்கள் நினைப்பதைவிட எனக்கு மிகவும் முக்கியமானவை. நான் சிறிது காலம் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருப்பேன்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles