சூர்யா ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்திருந்த அந்த தருணம் இப்போது நிஜமாகி இருக்கிறது. ஒரு வெற்றிப்படம் மட்டும் அல்ல, பாக்ஸ் ஆபிஸை குலுக்கிய கம்பேக் ஹிட்டாக கருப்பு மாறியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக சூர்யாவின் படங்கள் விமர்சன ரீதியாக பேசப்பட்டாலும், தியேட்டர் வசூலில் எதிர்பார்த்த உயரத்தை எட்டவில்லை என்ற பேச்சு இருந்தது. அந்த விமர்சனங்களுக்கு ஒரே அடியாக பதில் கொடுத்திருக்கிறது கருப்பு.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இந்த படம், சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. காரணம், இது சாதாரண வெற்றி அல்ல; நீண்டநாள் காத்திருப்புக்கு கிடைத்த மிகப்பெரிய திரையரங்க வெற்றி.
குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சூர்யாவுக்கு “மாஸ் தியேட்டரிக்கல் பிளாக்பஸ்டர்” இல்லை என்ற விமர்சனத்தை இந்த படம் உடைத்தெறிந்துள்ளது. ஆனால் கருப்புவை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது ரசிகர்கள் மட்டுமல்ல, குடும்ப ஆடியன்ஸின் ஆதரவு.
குறிப்பாக பெண்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதாக தியேட்டர் வட்டாரங்கள் கூறுகின்றன. அதேபோல் தமிழ்நாட்டை தாண்டி கேரளம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட இடங்களிலும் படம் நல்ல ஓட்டத்தை பெற்றுள்ளது.










