கார்த்தியின் விருமன் படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமான முறையில் மதுரையில் உள்ள ராஜ முத்தையா மண்டபத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
கார்த்தியின் விருமன் இந்த திரைப்பட இயக்குனர் முத்தையா அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் அவர்களின் மகள் அதிதி சங்கர் நடிக்கிறார்.
தன்னுடைய முதல் படமே கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிதி சங்கர் நிச்சயம் ரசிகர்களை ஈர்ப்பார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இயக்குனர் முத்தையா எடுத்த படங்கள் டெம்ப்ளேட்டில் இந்தப் படமும் கிராமத்து பின்னணியில் உருவாகி உள்ளது.
குறிப்பாக அவர் எடுத்த குட்டிப்புலி, கொம்பன், மருது, கொடிவீரன், புலிப்பாண்டி போன்ற படங்களைப் போன்று இந்தப் படமும் கிராமத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. ஏற்கனவே யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான கஞ்சா பூ கண்ணால பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது அதனை தொடர்ந்து இன்று விருமன் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ட்ரெய்லரை பார்க்கையில் கார்த்திக்கு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என்ற பெரிய நம்பிக்கை ரசிகர்களிடம் நிலவிவருகிறது காரணம் பருத்திவீரன் படத்தில் கார்த்தி எப்படி ஜாலியாக திமிராக பார்த்தமோ அதே போல கார்த்தி மீண்டும் விருமனாக கண் முன் வந்து நிற்கிறார்.
பிள்ளைக்கு எதிரி அப்பா இது தான் விருமன் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்தி பிரகாஷ்ராஜின் நடிப்பு பெரிய அளவில் பேசப்படும் என்றும் நிறைய விருதுகளை வாங்குவார்கள் என்றும் கூறுகிறார்கள் சினி வட்டாரத்தினர்.