Thursday, November 13, 2025
-- Advertisement--

தர்மஸ்தலா விவகாரம் உலகமே எதிர்பார்க்காத மாபெரும் TWIST….!!! விசாரணையில் தெரியவந்த பல திடுக்கிடும் தகவல்..!!!!

தர்மஸ்தலா கர்நாடகாவில் பழமை மற்றும் புகழ் வாய்ந்த கோவில். அந்த கோவில் தேவஸ்தானத்தில் உள்ள சிலர் சொல்லி 100 கணக்கான இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் சடலங்களை புதைத்தேன்.

நிறைய பெண்களின் உடலை புதைத்துளேன் என்று அந்த கோவிலில் தூய்மை பணியாளராக வேலை பார்த்த MASKMAN மண்டை ஓட்டுடன் வக்கீல்களை அழைத்து கொண்டு புகார் ஒன்றை அளித்தார். மனசாட்சி உறுத்துகிறது இன்னும் என்னை தூங்கவிடாமல் செய்கிறது. எனக்கு பாதுகாப்பு கொடுங்கள் நானே நேரில் அழைத்து செல்கிறேன் எனக்கு நான் புதைத்த இடம் தெரியும் என்று நீதிமன்றத்தில் கூறினார். உடனே கர்நாடக நீதிமன்றமும் அதிர்ச்சியுடன் தர்மஸ்தலாவில் அவர் சொல்லும் இடம் எல்லாம் தோண்ட அனுமதியும் கொடுத்து தோண்டுதல் பணியை ஸ்பெஷல் இன்வெஸ்டிகஷன் டீம் ஒன்றை அமைத்து தேட தொடங்கியது.

தர்மஸ்தலாவில் சுற்றி உள்ள காட்டு பகுதியில் பகுதியில் 13 இடங்களில் தோண்ட தொடங்கினார்கள். ஒரு நாளுக்கு 3 லட்சம் செலவு செய்து தேடுதல் பணியை தொடங்கியது கர்நாடக அரசு. கர்நாடக மட்டும் அல்லாமல் மொத்த உலகமே ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என்று உற்று நோக்க ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு குழி தோண்டும் போதும் மண்டை ஓடு கிடைத்துள்ளது சேலை ஒன்று கிடைத்துள்ளது என்று செய்திகள் வந்து கொண்டே இருந்தது. புகார் கொடுத்த தூய்மை பணியாளர் பெண் சடலங்களை புதைத்தாக சொல்லப்பட்ட இடத்தை தோண்டுவதற்கு பெரும் சவாலாக அமைந்தது அங்கு இருந்த மின்சார தூண்கள் மற்றும் அந்த பகுதியில் சில சிக்கலை சந்தித்தார்கள்.

புகார் கொடுத்த MASKMAN GPR கொண்டு வந்து தேட சொல்லி கேட்டுக்கொண்டார். GPR வைத்து தேடும் போது பூமிக்கு அடியில் என்ன இருக்கு என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம் என்று SIT (SPECIAL INVESTIGATION TEAM ) மேல் இடத்தில் பேசி GPR கருவியை வாடகைக்கு எடுத்துவரப்பட்டு தேட ஆரம்பித்தார்கள்.

அடுத்து நடந்த மாபெரும் ட்விஸ்ட் :

எவ்வளவு தேடியும் அந்த இடத்தில் சடலங்கள் கிடைக்காததால் புகார் அளித்தவர் மீது SITக்கு சந்தேகம் வர அவரை குறித்து விசாரணையை அவருக்கே தெரியாமல் தொடங்கியது SIT. MASKMAN உடன் வேலை செய்த நண்பர்களிடம் விசாரித்தால் அவர் பொய் சொல்லுவான் சார் அப்படியெல்லாம் சடலங்களை நாங்கள் புதைக்கவில்லை யாரும் புதைக்க சொல்லவும் இல்லை ஆனால் அந்த இடத்தில் சில சடலங்களை சில நேரம் பார்த்து உள்ளோம் ஆனால் அது பெண் சடலங்கள் இல்லை என்று கூற விசாரணை சூடு பிடிக்க தொடங்கியது.

MASKMAN SIT 24 மணி நேரம் விசாரணை நடத்திய பின் MASKMAN தான் சொன்னது பொய் என்று ஒப்புக்கொண்டார். சிலர் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக பொய் சொன்னேன் என்று கூறி உள்ளாராம். உடனே SIT அவரை கைது செய்து தற்பொழுது காவலில் வைத்து விசாரணை செய்து வருகிறது. அவருடைய படம் தற்பொழுது வெளிவந்து உள்ளது. அவர் மாண்டியா மாவட்டம், சிக்கபள்ளி கிராமத்தை சேர்ந்த சின்னய்யா என்பது தெரிய வந்துள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, பரிசோதனை செய்யப்பட்டது.

பின், அவர் பெல்தங்கடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் காவலில் வைத்து விசாரிக்க SIT-க்கு நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அவரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த தேடுதல் பணிக்கு கர்நாடக அரசு தினமும் ₹1.5 லட்சம் to ₹2 லட்சம் செல்வாவு செய்து உள்ளார்கள். GPR இரண்டு நாள் மட்டுமே 18 லட்சம் மொத்தம் 40 லட்சம் வரை செலவு செய்ததாக தகவல்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles