தற்போது சீரியல் சினிமா பிரபலங்கள் பலரும் இறந்து வருகின்றனர். பலர் தற்கொலைகளை மேற்கொள்கின்றனர். சமீபத்தில் கர்நாடக சீரியலை சேர்ந்த சந்தனா சிறிய வயதிலேயே தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் வசித்து வருபவர் சந்தனா. இவருக்கு வயது 29. இவர் சின்னத்திரையில் நடிகையாக நடித்து பிரபலமானவர். சில விளம்பரங்களிலும் நடித்து உள்ளார்.
சந்தனா தினேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவர்களுக்கிடையேயான பழக்கம் காதலாக மாறியது. இவர்கள் பல இடங்களுக்கு ஜோடியாக சேர்ந்து சுற்றித்திரிந்து உள்ளனர். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான சந்தனா தனது வீட்டிலேயே விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சந்தனாவின் இறப்பு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட பொழுது தன் செல்போனில் தன் சாவுக்கு காதலன் தினேஷ் என்று பேசிய வீடியோ ஒன்று கிடைத்துள்ளது.
அதில் தினேஷ் ரூபாய் 5 லட்சம் பணம் வாங்கி கொண்டதுடன் அவரை திருமணம் செய்து கொள்ள மாட்டேன் எனவும் தினேஷ் கூறியுள்ளதாக தெரிகிறது. அதனால் மனமுடைந்து போன சந்தனா தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.