கன்னி ராசிக்காரர்களே இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு எவ்வித பலன்களை தரும் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
கன்னி
மூச்சு பிரச்சனை, அலர்ஜி இது போன்ற பிரச்சனை காது, மூக்கு, தொண்டை போன்ற இடத்தில் பிரச்சனை வராமல் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். பத்தாம் இடத்தில் குரு இருப்பதால் பதவியில் கண்டிப்பாக ஏதாவது ஒரு நல்லது நடந்தாலும் நீங்கள் அதை கெடுத்துக்கொள்ளக் கூடாது. அதிகமாக கோபப்பட்டால் உங்களை வேலையிலிருந்து நீக்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
மேலதிகாரிகள் விஷயத்தில் வாக்குவாதம் கூடாது. செய்த தவறுக்கு உங்கள் மேல் பழி வரும் அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சண்டை போடக்கூடாது, தொழிலில் வாக்குவாதம் செய்யக்கூடாது, தொழிலில் ஏதேனும் மாற்றம் வந்தால் ஏற்றுக்கொள்ள வேண்டும். அடிமை தொழிலில் இருந்து தனிப்பட்ட தொழில் தொடங்கக்கூடிய வாய்ப்பு வந்தாள் ஏற்றுக்கொள்ள வேண்டும். கூட்டு தொழிலில் பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு துணை அல்லது துணைவியருடன் வாக்குவாதங்கள் இல்லாமல் இருப்பது நன்மையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தித் தரும். கணவனாக இருந்தால் மனைவியின் உடல்நிலை மனைவியாக இருந்தால் கணவனுடைய உடல்நிலை முக்கியம். ஜென்மத்திலிருந்து கேது விலகுவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு பெரிய பலம் எதிர்பார்க்காத நல்ல விஷயம் விரைவில் நடக்கும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு பழைய கடன்கள் பைசல் ஆகும். தாய்வழி உறவு தந்தை வழி உறவு ரத்த பந்த உறவுகளில் இருந்த பாதிப்புகளில் இருந்து பரிபூரண விருத்தி ஏற்படும். எதிர்பார்க்காத இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தனிப்பட்ட முறையில் மனதில் இருந்த பாரங்கள் குறையும். இழுப்பறையாக இருந்த நிலைமை படிப்படியாக மாறுவது மிகப்பெரிய நம்பிக்கையும் மிகப்பெரிய அனுகூலத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். குடும்பத்தில் அனேகர் தலையீடு பிறர் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு மட்டும் கூடவே கூடாது.
கன்னி ராசிக்காரர்களுக்கு கண்டிப்பாக அரசுத்துறை அரசியல்வாதிகள் யாரோ ஏதாவது உங்களுக்கு எதிராக உடனிருந்தே சில சதிகளை செய்வார்கள் மிக கவனமாக கையாளுவது மிக மிக முக்கியம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக நாலாம் அதிபதியும் ஏழாம் அதிபதியும் ஆன குரு பத்தாம் இடத்தில் வருவது கேந்திராதிபதி ஆனாலும் கண்டிப்பாக அவர் நல்லது செய்வார் இந்த சமயத்தில் கோபம் கொள்வது திட்டுவது கூடாது.
கொடுத்த வாக்கை காப்பாற்றலாம் தனம் ஏற்படும் அஷ்டலஷ்மி கடாட்சம் ஏற்படும் சுப காரியம் எல்லாம் நடக்கும் குருபலமே இல்லை என்றாலும் திருமணத்தடை நீங்கும் குடும்பத்தில் அனுகூலம் ஏற்படும் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும் கொடுத்த வாக்கை குடும்பத்திலும் காப்பாற்றலாம் வெளிவட்டாரத்தில் காப்பாற்றக்கூடிய நல்ல காலகட்டம் கன்னி ராசிக்காரர்களுக்கு ஏற்படும்.
நிறைய விஷயம் நல்லது நடக்கும் தேன் தடவ வார்த்தை பேசக்கூடிய கன்னி ராசிக்காரர்கள் பெரும் வெற்றியையும் பெரும் சந்தோஷத்தையும் பெரும் அனுகூலத்தையும் நிச்சயமாக பெறுவார்கள். ஒரு நாள் அல்லது இரண்டு நாள் மருத்துவமனையில் இருக்கக்கூடிய நிலைமை ஏற்படும் மீண்டும் சந்தோஷமாக மீண்டு வருவீர்கள். குடும்பத்தில் மட்டும் சிறிது கவனமாக இருக்க வேண்டும் அதேசமயம் ரத்த பந்த உறவுகளுக்கும் உங்களுக்கும் இருந்த பாதிப்புகள் பரிபூரண நிவர்த்தி ஏற்படுவது மிகப்பெரிய நன்மையையும் மிகப்பெரிய சந்தோஷத்தையும் அடைவீர்கள்.
பரிகாரம்
திருக்கொள்ளிக்காடு மிக முக்கியம் திருவாரூரில் இருந்து திருத்திரப்பண்டி செல்கின்ற வழியில் திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் இந்தத் திருக்கொள்ளிக்காட்டில் வந்து எப்போதுமே அரை லிட்டர் நல்லெண்ணெய் அல்லது 50 கிராம் கூட கொடுக்கலாம் அல்லது 50 கிராம் பசு நெய் விபூதி 50 கிராம் கொடுத்து கோவில் முறைப்படி செய்து எடுத்து வருவது நல்லது.










