Saturday, January 25, 2025
-- Advertisement--

தனது அத்தை மகனின் மரணத்தில் இருந்து மீளாத நடிகர் அர்ஜுனின் மகள்..!!!

சிரஞ்சீவி ஷார்ஜா கன்னடாவில் முக்கியமான நடிகர்களில் இவரும் ஒருவர். நடிகர் அர்ஜுனின் சகோதிரி மகனான சிரஞ்சீவி “வாயுபுத் ரா ” என்ற கன்னட படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு முன் தனது மாமா அர்ஜுனிடம் நான்கு வருடம் பணிபுரிந்து உள்ளார். கன்னட திரை உலகில் நல்ல ஹீரோ என்ற பெயரை சம்பாரித்த இவர் 10 வருடங்களாக நடிகை மேகனாவை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

காதலுடன் நன்றாக சென்று கொண்டு இருந்தது இவர்களுடைய வாழ்க்கை. மேகனா கர்ப்பமாக இருந்தார். இந்த செய்தியை ஷூட்டிங்கில் இருக்கும் போது அறிந்த சிரஞ்சீவி அங்கு உள்ள பெரியவர்களிடம் இந்த சந்தோஷமான செய்தியை சொல்லி ஆசி பெற்று உள்ளார். குழந்தையை பார்க்க ஆவலுடன் இருந்த சிரஞ்சீவிற்கு எதிர்பாராத விதமாக நெஞ்சு வலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிச்சையில் இருந்த சிரஞ்சீவி சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்தார். இந்த செய்தி திரை உலகத்தியே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 39 வயது ஆன நடிகர் தனது குழந்தையை பார்க்க முடியாமல் மரணம் அடைந்த சம்பவம் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இறுதி ஊர்வலத்தில் அவரது மனைவி தனது கணவனின் இழப்பை தாங்கமுடியாமல் கதறி அழுத்த காட்சி கல் நெஞ்சையும் உருகியது.

தனது மனைவி கர்ப்பம் ஆனவுடன் அவருக்கு ஒரு பொம்மையை கிப்ட்டாக கொடுத்து உள்ளார். பெண் குழந்தை பிறக்கவேண்டும் என்று அவர் ஆசையாக கூறி உள்ளார். ஆனால் விதி எல்லாம் முடித்து விட்டது.

தற்பொழுது சிரஞ்சீவி இறந்து 5 நாட்கள் ஆகியும் அவர்கள் குடும்பத்தினர்கள் சோகத்தில் இருந்து மீளவில்லை. அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா சிரஞ்சீவுடன் எடுத்து கொண்ட சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டு தனது நினைவுகளை பகிர்ந்து உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles